Sunday, August 27, 2017

“ நான் எங்க இருக்கேன் “ ! ! ! !





பழைய  படங்களில் பைத்தியம் அல்லது  மயக்கம் தெளிஞ்சு எழுந்திருப்பவர்கள் கேட்க்கும் முதல் கேள்வி.
இந்த கேள்விக்கும் பதிவின் இந்த தலைப்புக்கும் நேரடி தொடர்பில்லை , நகைச்சுவைக்கே .

சரி விஷயத்துக்கு வருவோம் உங்களிடம் எங்கே இருக்குறீர்கள் என்று கேட்டால்  என்ன சொல்வீர்கள். கேட்கிற ஆளை பொறுத்த்து  வீடு அலுவலகம் என்று எதுவோ அதை சொல்வீர்கள்.

ஒரு கற்பனைக்கு , புதிதாய் ஒருவர் நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டால்  என்ன சொல்லலாம் , உங்களது ஊரின் பெயரா ? நாட்டின் பெயரா இல்லை பூமியில் தான் என்று சொல்லலாமா ?, 


சரி நாம் அதையும் தாண்டி யோசித்து சொல்வோமா
? தெரியவில்லை ?!
இந்த பதிவில் அதையும்  தாண்டி  கொஞ்சம் யோசிப்போமா,....

இவ்ளோ பெரிய இடத்திலா இருக்கிறோம்
  ???! !

என்று நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும்
.





 

நமது பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ  மற்றும் பூமியின் பூமத்திய ரேகையில் குறுக்காக 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர் நீளம் உள்ளது .
புரிதலுக்காக... நமது  பூமி நாம் வாழும் பாரத நாட்டின் அளவில் 150 மடங்கு பெரியது, அதாவது இந்தியா அளவில் பூமியில் 0.06 % சதவிகிதம், ஆம் பூமி பரப்பளவு    ( 196,900,000 square miles , நம் நாட்டின் பரப்பளவு 1,269,219 sq mi )

எவ்வளவு  பெரிய பூமி இல்லையா ! ! ! ! ! !
---------------------------------------------
--

இதற்கே ஆச்சர்யமா ,

அடுத்து


நமது பூமி சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களில் ஒரு கோள், நான்காவது பெரிய கோள் அதுமட்டும் அல்ல
 பூமியை விட
வியாழன் 11 மடங்கு பெரியது ,
கோள்களின் விவரம் உங்களுக்காக கீழ்

Jupiter

1,120% the size of Earth

Saturn

945% the size of Earth

Uranus

400% the size of Earth

Neptune

388% the size of Earth

Venus

95% the size of Earth

Mars

53% the size of Earth

Mercury

38% the size of Earth

 இதை பார்க்கும் போது  பூமி சூர்ய குடும்பத்தில் எவ்வளவு பெரியது என்பது புரிந்திருக்கும்.







சரி நம் சூரியனை பற்றி பாப்போம்,

சூரியன் நாம் வசிக்கும் பூமியின் குறுக்கு அளவில் 109 மடங்கு பெரியது
ஆகா நமது பூமி சூரியனை சுற்றி வரும் அளவில் ஒரு சின்ன கொசு,  சூரியன் எவ்வளவு பெரிசு இல்ல.
! ! ! ! ! ! !



             
 சரி
இவ்ளோ பெரிய சூரியன் தனியாகவா  இருக்கு ? இல்லை.
நம் சூரியன் பேர் அண்டத்தில் ஒரு நட்சத்திரம் , ஒரு நட்சத்திரம் மட்டும் அல்ல கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம்ஆம் நம் சூரியனை போலவே பல கோடி நட்சத்திரங்களும் , நட்சத்திர குடும்பங்களும் உள்ளது.



அந்த பேர் அண்டம் எவ்வளவு பெரியது
அதன் அளவுகளை பார்ப்பதற்கு முன்

ஒளி ஆண்டை பற்றி பார்ப்போம்
,

அதென்ன ஒளி ஆண்டு
?

நாம் இதுவரை -- தூர  அளவை- - மீட்டர் , கிலோ மீட்டர் , மைல் என்ற அளவுகளில் பார்த்தோம்
இனி அப்படி தூரத்தை கணக்கிட்டால் கோடி கோடி மைல் என்று போய் கொண்டே இருக்கும்.

அதனால்

ஓளி ஒரு
 நொடியில் எவ்வளவு தூரம் பயமன் செய்யுமோ அந்த அளவை  வைத்து தூரத்தை கணக்கிடுவது எளிதாகும்.
ஒரு நொடியில் ஒளி முன்னூறு ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும்.
அதை வைத்து பார்க்கும் போது

300,000 கி. மீ. 

X 60

நிமிடத்துக்கு


X 60   X 60

ஒரு மணி நேரத்துக்கு


X 60 X 60 X 60 X 24

ஒரு நாளைக்கு


X 60 X 60 X 60 X 24  X 365

ஒரு வருடத்துக்கு - பயணம் செய்யும்


ஒரு ஒளி ஆண்டின் அளவு கிட்டத்தட்ட 9.5 ( 9,460,800,000,000 ) லட்சம் கோடி கி. மீ. பயணம் செய்யும் தூரத்தை குறிக்கும்.



ஒரு ஒளியாண்டு என்பது ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் ஒரு  வருடத்திற்கு பயணம் செய்யும் தூரம் ஆகும்.


சரி இப்போது பார்ப்போம்
நமது பேர் அண்டத்தின் அளவை ,

பால் வெளியின் விட்டம்   (diameter)  980,000 ஒளியாண்டு அதாவது ஒளியின் வேகத்தில் பால் வெளி மண்டலத்தில் குறுக்காய் பயணம் செய்ய கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்.நாம் வாழும் பேர் அண்டத்தின் பெயர் பால் வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸி (Milky way galaxy ).சூரியன் போன்ற பல கோடி நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம்.

எவ்ளோ பெருசு நம்ம கேலக்ஸி , ஆமா  சூரியனே ஒரு சின்ன தூள் போல தான் இருக்கும் , அவ்ளோ பெருசு
.






அவ்ளோ பெரிய galaxy வேற எதாவது இருக்கானு telescope ல பார்த்தா galaxy  ஒன்னு தனியாக இருந்த தெரியாதாம். கூட்டம் கூட்டமா சேர்ந்து இருந்தால் தான் ஒரு புள்ளி மாதிரி தெரியுமாம்.

அப்போ இவ்வளவு பெரிய galaxy சேர்ந்து இருந்தால் தான் தெரியும் என்றால் , எவ்வளவு தூரம் அதற்கிடையில் இருக்கும் என்று நினைத்து பார்க்கவேய ஆச்சர்யமாக இருக்கிறது.






அப்படி பட்ட ஒரு galaxy சிலந்தி வலை போல இருக்கும் இடத்தில் , அதன் மேலே பல galaxy கூட்டம் சேர்ந்து இருக்கிறதாம். அதை cluster என்று சொல்வார்கள். அப்படி பட்ட cluster  நிறைய ஒன்று சேர்ந்து super clusters என்று பெயரிடப்பட்டுள்ளது.

Sunday, July 30, 2017

மீண்டும் சிலாகிப்போம்


மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இனைய பதிவுகளொடு  இணைவதில் மகிழ்ச்சி. கால தேவன் கைவண்ணத்தால் நிகழ்ந்த இந்த  இடைவெளியையும் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

இனி வரும் பதிவுகள் சின்ன வயது கிறுக்கல்கள் பின் என் நெஞ்சில் பதிந்த நிகழ்வுகளோடு  சேர்ந்தே இருக்கும்.


நிகழ்வுகள் காலம்இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததே. நிகழ்வுகள் இல்லாத நேரத்தை கால தேவன் கணக்கிலே எடுப்பதில்லை.
              ஆம்  உலகில் சூரியன் சந்திரன் காற்று இப்படி எதுவும் மாறாமலே இருந்தால் கால மாற்றத்தை எப்படி உணர்வது. எல்லா நிகழ்வுகளும் அப்படியே. அதை புரிதலும் மகிழ்தலும் சேர்ந்தே இருக்கும் வண்ணம் ஏற்றுக்கொள்வோம்.


அப்படி நான் படித்து எனக்கு பதிந்த சில நல்ல பயனுள்ள  நிகழ்வுகளை . இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் .


வாழ்க வளமுடன் !!!

Thursday, January 20, 2011

எம்.ஜி.ஆர் ? - நம்பியார் ?- 1



வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று மனிதர்களை எதிர்கொள்வது , அதாவது " Handling the People , " என்று சொன்னால் அது சரியாக இருக்கும் .



அடிப்படையில் நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள அல்லது நாம் அன்றாடம் சந்திக்கின்றவர்கள் இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் சரி , நாம் அந்த நபரை பற்றிய நம் அபிப்ராயம் ஒன்றை நம் மனதில் ஏற்படுத்து கொள்கிறோம் . அது கணிசமான நேரங்களில் இரண்டு விதமாகத்தான் இருக்கும் ஒன்று அவர் நல்லவர் அல்லது மோசமான நபர் , இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் அவர் M.G.R ,. அல்லது நம்பியார் இப்படி திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல வைத்து கொள்கின்றோம் .


ஆனால் உன்மையில் கணிசமானவர்கள் அப்படி இல்லை . இரண்டும் கலந்தவர்கலாகதான் இருகின்றார்கள் , இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த " ஈரம் " என்ற ஒரு திரைபடத்தில் வரும் சில வார்த்தைகளை இங்கே சேர்ப்பது இந்த பதிவிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன் ,அந்த திரைப்படத்தின் climax இல் , சில வசனங்கள் ,


" ஆண்டவன் உலகை படைத்தான் , முதல் யுகத்தில் அனைவரையும் நல்லவர்களாக படைத்தான் , அங்கு நடந்த வினை பதிவின் காரணமாக , அடுத்த யுகத்தில் தீயவர்களையும் நல்லவர்கலயும் படைத்தான் ,ஆனால் தனி தனி இடத்தில் படைத்தான். அங்கு செய்த நல்வினை தீவினை காரணமாக அடுத்த யுகத்தில் நல்லவர்கலயும் தீயவர்கலயும் ஒரே இடத்தில சேர்ந்து வாழ படைத்தான் ஆண்டவன் .அடுத்து இந்த கடைசி யுகத்தில் நல்லவர்களும் தீயவர்களும் ஒரே மனிதனுக்குள் வைத்தான் இறைவன் ,"என்பது போல் இருக்கும்


அதுபோல , நாம் யாரயும் நல்லவர்கள் அல்ல தீயவர்கள் என்ற அடிப்படை என்னத்தை நீக்கி , எல்லோரையும் எதிர் கொள்ள வேண்டும் .இங்கு யாரும் முழு M.G.R ம் இல்லை நம்பியாரும் இல்லை .

சரி எப்படி இருக்கின்றார்கள் என்பதை பார்த்தோம் , நாம் எப்படி நடந்துகொள்வது நல்லது , அது நமக்கும் மற்றும் எல்லோருக்கும் எப்படி நன்மை பயக்கும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.. .


வாழ்க வளமுடன் !!!












Thursday, January 6, 2011

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.



எனக்கு உயிர் கொடுத்து என்னை காத்துகொண்டிருக்கும் என் பெற்றோரை வணங்கி .
அனைத்தையும் படைத்து காத்து கடைதேற்றும் இறைவனை வணங்கி என்பதிவுகளை துவங்குகின்றேன் .


இன்றைய பதிவில் ,

விநாயக பெருமான் தனது உருவத்தால் வாழ்க்கைக்கு நமக்கு கூறும் சில பயனுள்ள செய்திகளை பார்ப்போம் ,

அவரது சிறிய வாய் , கூர்மையான கண்கள், பெரிய காது , மற்றும் நீண்ட மூக்கு ( தும்பிக்கை ) இருப்பது ,

நாம் குறைவாய் பேசி அதாவது வள்ளுவர் கூறுவது போல்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

நாம் எப்போதும் அன்பு , அழகு நிறைந்ததோடு சேர்த்து அளவோடு பேச வேண்டும் என்பது போலும் ,

கூர்மையான பார்வை எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்து பார்க்கவேண்டும் , மற்றும் நம் பார்வை கூர்மையான வேல் போல நேர்மையாகவும் தீயவைகளை அளிக்கும் வண்ணமும் இருக்கவேண்டும் என்பது போலும் ,

பெரிய காது இதனால் நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனத்தோடும் , பரந்த உள்ளம் கொண்டது போல் பெரிய காது கொண்டு கேட்க வேண்டும் ,

மற்றும் தும்பிக்கை கூறுவது ,வாழ்க்கை போராட்டத்தில் எல்லோருக்கும் இருக்கும் இரு கைகளோடு சேர்த்து நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் ,

இப்படி நமக்கு பல பயனுள்ள செய்திகளை கூறுவதாக இருக்கிறது .


மேலும் ,

விநாயகர் தனது பெற்றோரையே உலகம் என்று சுற்றி வந்து பழம் பெற்ற கதை எல்லோருக்கும் தெரியும் ,
அந்த கதை கூறுவது ,
கடவுள் யார் என்று கேட்டால் நாம் சொல்லும் முதல் பதில் நம்மை படைத்தவன் என்று ,
படைத்தல் என்றால் உடலையும் உயிரையும் கொடுப்பது அதை செய்தவர்கள் நம் பெற்றோர்கள் தான் , நாம் நம் பெற்றோருக்கு உண்மையாக இருந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துகொண்டலே நாம் எல்லாவற்றிலும் வெல்லலாம் என்பதை கூறுகின்றது .

இன்றைய பதிவின் மூலம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று உணர்வோம் , மற்றும் விநாயக பெருமானின் உருவமே வாழ்க்கை தத்துவங்களை உள்ளடக்கியதாக பார்க்கிறோம் .

மீண்டும் ஒரு நல்ல பதிவோடு சந்திப்போம் .

வாழ்க வளமுடன்