Saturday, October 28, 2017

மனம் போல மாங்கல்யம்

                                                               இறைவனுக்கு நன்றி









                        
 (முன் குறிப்புஇது திருமணம் பற்றி தகவல் அல்ல  )




சென்ற பதிவுகளில் பிரமாண்டமான பிரபஞ்சத்தை பற்றியும் நாம் எதை நோக்கி செல்வது என்பதை பற்றி பார்க்கும் முன் அன்றாட வாழ்க்கை எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை பார்த்தோம். இந்த பதிவில் அதை பெறுவதர்க்கான ஏற்ற சூழ்நிலைகளை எப்படி உருவாக்கி கொள்வதை பற்றி பார்க்கலாம் அதன் பின் அதை பெறுவதர்க்கான முறைகளை
பார்க்கலாம்.




“Law of attraction” இதை பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியமானது.
நிறையபேர் இதன் மூலம் பலன் பெற்றும் உள்ளார்கள் .
அதென்ன Law of attraction ?
அதை எளியமுறையில் சொல்லவேண்டும் என்றால்,  நாம் நீண்ட காலமாக பயன் படுத்தும் வார்த்தை தான் அது


“ 
மனம் போல மாங்கல்யம்


அதை இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால்  ஒருவரது மனம் எப்படி இருக்கிறதோ அது போலத்தான் வாழ்க்கையும் அமையும்.


உதாரணத்துக்கு ஒருவரது மனதிற்குள் Negative thoughts  என்ன இது வாழ்க்கை, இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை மற்றும் கொள்ளை , அரசியவாதிகள் மோசமானவர்கள் , வாத்தியார்கள் மோசம் , போலீஸ் மோசம் இப்படி எல்லாம் மோசம் என்கிறவர்கள் என்னதான் செய்வது என்று சலிப்போடு இருக்கிறார்கள்.  அவர்கள் அதே போல பொருள்களை தான் attract செய்கிறார்கள் . எப்படி என்றால் இந்த பிரபஞ்சம் அறிவுள்ளது , நாம் சிந்திக்கும் அதே அறிவுள்ள பொருள்களை நமக்கு ஈர்த்து தருகிறது . அதன் படி Negative  எண்ணங்கள் உள்ள மனிதர்கள் வாழ்க்கையும் அப்படியே இருக்கும்.  அவர் செய்கின்ற செயல்களிலும் அது வெளிப்படும் , அதே போன்ற சம்பவங்களை சந்திப்பார் , அவருக்கு சரியாக வியாபாரம் நடக்காது அவருக்கு எதிராக எல்லோரும் இருக்கும் சூழ்நிலைகள் ஏற்படும்.

அடுத்து  இன்னொரு மனிதர் எப்போதும் உற்சாகத்துடன் இருக்கிறார் , எல்லோரிடமும் மகிழ்வோடு நடந்துகொளிறார் , எல்லோரும் நல்லவர்கள் என்று நினைக்கிறார் , எல்லோருக்கும் உதவி செய்யவும் தயாராக உள்ளார்
அவர் அதே போன்ற சூழ்நிலைகளை சந்திக்கிறார் அவர் வாழ்க்கையும் அதே போல் அமைகிறது.



நம் மகாபாரத்தில் வரும் ஒரு சம்பவம்,

துரியோதனனையும் தர்மரையும் துரோணர் ஒரு சோதனைக்கு அனுப்புகிறார்.
இந்த உலகம் எப்படி இருக்கிறது என்ற பார்த்து வாருங்கள் என்று.

துரியோதனன் பார்த்து வந்து இந்த உலகமே மோசமானது எல்லாம் அயோக்யர்கள் என்று சொல்கிறார்.

 அதே தெருவில் தருமரும் சென்று பார்த்து வந்து , எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள் , இங்கு வீட்டை கூட யாரும் பூட்டவில்லை திருடர்பயமே இல்லை , எல்லாம் நன்றாக உள்ளது என்றார்.

ஆக உலகத்தை பார்க்கும் முறை ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது.
அந்த பார்வையை பொறுத்து வாழ்க்கையும் நிர்ணயிக்க படுகிறது .

இதுவே மனம் போல மாங்கல்யம் . உங்கள் மண் எப்படி இருக்கிறதோ அதே போல் வாழ்க்கையும் அமையும்.
இதை வைத்து பார்க்கும் போது உங்கள் மனதை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையையும் மாற்றலாம் .

நம் மனதை எப்படி மாற்றலாம் என்பதை பற்றி அடுத்து பார்க்கலாம்
.


இந்த
Law of attraction பற்றி பேசக்கூடிய விஞானிகள் நமக்கும் ஒரே மனம் தான் உள்ளது, ஆனால் அது செயல் படும் விதம் இரண்டக உள்ளது என்று சொல்கிறார்கள்.
 ஒன்று ஆழ்மனம் , இனொன்று வெளிமனம் .
இதை நாம் வழக்கமாக சொல்லும் விதத்தில் சொல்லவேண்டும் என்றால் மதி மற்றும் விதி  என்று சொல்லலாம்.


மதி என்பது rational mind , எதையுமே பகுத்தறிந்து இதை செய்யலாம் இதை செய்யயக்கூடாது இதை செய்தால் இந்த விளைவு வரும் என்று சிந்திப்பது.


மற்றொன்று விதி இதற்க்கு எதுவும் சிந்திக்கத்தெரியாது ஏற்கனவே நாம் கொடுத்துள்ள
input அல்லது பயிற்சி அதை வைத்து செயல்படுவது விதி.


இப்படி நமக்கு இரண்டு விதமாக செயல் படும் மனம் உள்ளது.
இதில் வெளி மனம் பற்றி மட்டுமே தெரியம் அனால் ஆழ்மனம் பற்றி நமக்கே தெரியாது .


புரியும் படி சொல்லவேண்டும் என்றால்,  உதாரணத்துக்கு
நிறைய நேரங்களில் நமக்கே நடந்திருக்கும்,
சாப்பிட Hotel  செல்லும் போது எதோ ஒன்று சாப்பிடவேண்டும் என்று எண்ணி செல்லவோம் , அனால்  அங்கு சென்றவுடன் மாற்றி Order  செய்யவோம் , இதை நம் ஆழ்மனமே முடிவு செய்கிறது .

ஒருவரை முதல் முறை பார்த்திருப்போம் இருந்தாலும் பாவம் அவருக்கு எதாவது உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்,
இன்னும் சிலரை பார்த்தவுடன் நல்லா வேணும் படட்டும் என்று தோன்றும் இதெல்லாம் முடிவு செய்வது நம் ஆள் மனம் தான் .

ஆச்சர்யமான ஒரு தகவல் , பெரும்பாலான நம் வாழ்க்கை நம் ஆழ்மனம் தான் தீர்மானிக்கிறது.
அது உள்ளிருந்து நம்மை இயக்குகிறது .
நம் விருப்பு வெறுப்புகள், ஆசா பாசங்கள் , முடிவெடுப்பது ,  judgment  எல்லாமே அங்கிருந்துதான் வருகிறது .
இதனாலே தான் வாழ்ககையும் மாறுகிறது.

ஒருவர் கஷ்டப்படுவதும் அல்லது சகல சௌபாக்கியத்துடன் இருப்பது இதற்க்கு அவர் ஆழ்மனம் தான் உதவி செய்கிறது
.
புறமனம் முடிவெடுப்பதற்கு மட்டுமே உதவுகிறது .

இந்த ஆழ்மனதை சரி செய்வது என்பது தான் முக்கியம்
.
அதை எப்படி செய்யலாம் ,


இந்த ஆழ்மனம் என்பது யாரும் நமக்கு தரமுடியாது வெளில இருந்தது ஒருவர் நாம் இப்படி தான் வாழவேண்டும் என்று நமக்குள் புகுத்த முடியாது அதை நாமே உருவாக்குகிறோம் .


சரி, நாம் அதை எப்படி உருவாக்குகிறோம் ,

அதை எப்படி சரி 
செய்து,
 நல்ல உடல் நலம் பெற ,
பொருளாதாரம் உயர்வடைய ,
தொழில் முன்னேற்றம் பெற ,
குடும்ப உறவுகள் மகிழ்வோடு வாழ செய்வது

அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்
. |






வாழ்க வளமுடன் !!!