Sunday, September 24, 2017

யார் first ?


                                                                    இறைவனுக்கு நன்றி 

 
             
                                   
சென்ற பதிவில் நாம் வாழும் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான வயதையும் அளவையும் பார்த்தோம் அப்படிப் பட்ட பிரபஞ்சத்தை பார்க்கும் போது நமது வாழ்வு எவ்வளவு அற்பம் என்று புரிந்திருக்கும்.
                     

             இப்படி பட்ட வாழ்க்கையில் நம் பிறப்பின் நோக்கம் நம் வாழ்க்கையை எதை நோக்கிப் பிரயாணிப்பது போன்ற தத்துவார்த்த பதிவுகளை பார்ப்பதற்கு முன் ஒரு சாரா சரி மனிதனாய் நம் அன்றாட வாழ்வில் எதையெல்லாம் முக்கியம்
, தினந்தோறும் நம் சிந்தனை செயல் எதுவெல்லாம் பிரதானம் மற்றும் எதற்கு எந்த வரிசையில் முக்கியத்துவம் அழிப்பது போன்ற பகிர்வுகளை பற்றி பார்ப்போம் .


                                              
நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் செயல்கள் பல முகங்களும் பரிணாமங்களை கொண்டது . அந்த பல்வேறு முகங்கள் கொண்ட செயல்கள் அவற்றின் முக்கியத்துவம் குறித்து புரிதலுடன்  அணுகுகிறோமா  என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
       

                 உதாரணத்துக்கு ஒருவர் தனது இருபத்தி வயதில் துவங்கி எப்போதும் விழிக்கும் முதல் உறங்கும் வரை தினந்தோறும் தனது வியாபாரம் தொழில் என்றே இருந்து வாழ்ந்து வாழ்க்கையை
முடித்தும் கொள்கிறார். மற்றொருவர் இளமையில் வாழ்வை அனுபவிக்கின் என்ற பேரில் தூங்கி , அன்றாட வாழ்வாதாரத்துக்கே போராடுகிறார்.
             மற்றொவர் எல்லா செயல்களை செய்தாலும் மகிழ்ச்சி சிரிப்பு இதெல்லாம் எதோ வேற்று கிரக வாசிகளுக்கு சொந்தம் போன்று சலிப்போடு வாழ்ந்தும் முடித்தும் கொள்கிறார். இன்னும் சிலர் எதற்கு தான் ஓடு கிறோம் என்பதே புரியாமல் தனது குடும்பத்தினருடன் பேசி எவ்வளவு நாட்கள் என்பதை கூட யோசிக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்கள்.


எல்லாத்துக்கும் மேல் இன்னும் சிலர் ஓடுகிற வேகத்தில் தொலைக்கக் கூடாததை  தொலைத்து மாத்திரைகளை வேர்க்கடை போல் தினமும் தின்று , ருஷியார ஒரு உணவு கூட உண்ணமுடியாமல் வலியோடு வாழ்ந்து முடிக்கிறார்கள்.


     நம் அன்றாட சாரா சரி வாழ்க்கை நிகழ்வுகளில் முடிவுகளில் முக்கியத்துவம் எதற்கு என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்யம் – ( நல்ல உடல் நலம் )


                                             சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழி நாம் அறிந்ததே.  நாம் எதற்க்காக எந்த செயல் செய்தாலும் அதன் நோக்கம் முடிவு இப்படி எதுவுமே நல்ல ஆரோக்கியம் இல்லை என்றால் அதை  பெற்று அனுபவிக்க முடியாது . ஒருவருக்கு பெரிய தொழில் அதிபர் ஆகா வேண்டும் என்பது லட்சியம் என்று வைத்துக் கொள்வோம் நல்ல ஆரோக்கியம் இல்லை என்றல் எப்படி அவரால் சிந்திக்க முடியும் அதை நோக்கி செயல் பட முடியும் அவர் நினைத்தபடி அந்த இடத்துக்கு வந்தாலும் எப்படி அதை ஆரோக்கியம் இல்லை என்றால் அனுபவிக்க முடியும். பணம் தான் இலக்கு என்றால் ஒரு நாள் பல கோடிகள் கையில் இருந்தாலும் உடல் நோய் உற்று இருந்தால் எப்படி அதை அனுபவிப்பது. ஆகா பிரதானமாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கே.

குடும்ப நலன் : 

                                 
அடுத்து முக்கியத்துவம் தரவேண்டியது நமது குடும்பத்துக்கே. மனைவி, மக்கள்,  பெற்றோர், உடன் பிறந்தோர் என்று குடும்ப உறவுகளை பேணுவது முக்கியம்.

                                        நாம் வெற்றி பெற்ற போது கொண்டாடி மகிழ்வதும் அந்த வெற்றியே தள்ளி போகும் போது ஆறுதல் கூறுவது குடும்ப உறவுகளே.   விழித்தது முதல் உறங்குவது வரை நமக்காக சுவாசிப்பவர்கள் சொந்தங்களே.
                                      அவர்களின் பிரச்சனைகளை கேட்டு சரி செய்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாராட்டி இப்படி  நம் குடும்ப கடமைகளுக்கு அடுத்து முக்கியத்துவம் தர வேண்டும்.
                       
நான் ரசித்த சில திரைப்பட வரிகள் 


 
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு

கனிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்

கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம்
கணிரசமாம் மது அருந்தி                   களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம்
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு


மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு ' 
பொருளாதார வளம் :


        வள்ளுவர் வாக்குக்கிணங்க 

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு
வையகத்தில் வாழும்போது, பொருள் செல்வம் இல்லையென்றால், வாழ்க்கையே வீணாகும்


                            அன்றாட தேவைகளுக்கேய போராட்டத்துடன் வாழ்கை நகர்வு இருக்கக்கூடாது
. அடிப்படை தேவை உணவு, உடை, இல்லம் போக கொஞ்சமாவது வாங்கியில் சேமிப்பு , தங்க அணிகலன், ஆயுள் காப்பீடு அடுத்து முடிந்தால் சிறிதேனும் வேளாண்மை நிலம் இருப்பது சிறப்பு .
என்னதான் தத்துவம் பேசினாலும் வாழ்வாதாரத்திர்ற்கு
 கடையில் பொருள் வாங்க காசு கொடுத்தால் தான் கிடைக்கும் அனால் அதை எவ்வளவு எதற்காக எப்படி ஈட்டுகிறோம் என்ற புரிதல் இருக்க வேண்டும்
தொழில் முன்னேற்றம்
:

 
                                   வணிகம் செய்தாலும், சொந்த தொழில் செய்தாலும் , அலுவலகங்களில் பணி புரிந்தாலும் சரி,  நம் மனதில் கொள்ளவேண்டியது அடுத்து இன்னும் முன்னேறுவது எப்படி என்று புதிய புதிய வாய்ப்புகள் குறித்து சிந்தித்து கொண்டே இருக்கவேண்டும் உயர்ந்த சிந்தையோடு.


அறிவு வளர்ச்சி
:
                   
ஒவ்வொரு நாளும் புதிது என்று நாம் அறிவு வளர்ச்சியையே பழக்கமாகவே செயல்படுத்த வேண்டு. அறிவு வளர்ச்சி என்பது அறிவியல் பற்றி புத்தகங்கள் வாங்கி படிப்பது இல்லை, தின்தோறும் நாம் செய்யும்  செயல்கள் இன்னும் எப்படி சிறப்பாக செயல் படுத்துவது, மாற்றி

யோசிப்பது
, புது புது விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்வது போன்று   மனதை  புதிப்பித்து கொண்டே இருக்கவேண்டும்.  உண்மையான அறிவு ஞானம் எது  என்பதில் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் .சமுதாய அக்கறை
:

          நாம் வாழும் மண்ணில் நம்மை சுற்றி உள்ள சமுதாயத்தின் மீது அக்கறையோடு வாழ் வேண்டும்.  எது நடந்தால் எனக்கென்ன என்று இல்லாமல் சுற்று புற தூய்மை, நாட்டு பற்று நலம் , முன்னேற்றம் இப்படி நம்மால் முடிந்தவரை தொண்டாற்ற வேண்டும் . சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதில் ஆரம்பித்து உங்களால் முடிந்தவரை உதவலாம் .


ாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு .

சமூக அக்கறையுடன் பொது தொண்டுகள் செய்வோர்க்கு தெய்வமும் இயற்கையம் உதவ காத்துக்கொண்டிருக்கும் என்பதை மறக்கவேண்டாம்
.

மகிழ்ச்சி கொண்டாட்டம் :

          
எதுவாயினும் நாளை காலை விடியத்தான் போகிறது இரவும் வரத்தான் போகிறது.  நாம் செய்யும் செயல்களில் சலிப்போடு செய்யாமல், எப்போதும் மகிஞ்சியும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும்.மகிழ்ச்சி என்பது எதை சார்ந்ததும் இல்லாமல் மனத்திர்ற்குள் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு செயலில் கலந்தே இருக்க வேண்டும்
. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குடும்பத்தினரோடு மகிகிழ்ச்சியை கழிப்பது அவசியம் .

அவ்வப்போது சிறிய பயணங்களும் . வருடம் ஒரு புது இடங்களுக்கு பிற மாநிலம் பிற நாடு என்று அவர் அவருக்கு முடிந்தவரை மகிழ்ச்சிக் காகவே ஒரு பயணம் செல்வது சிறந்த பழக்கம்.


இறைலயம்
;


மேற் கூறிய அத்தனை செயல்களிலும் இறைலயம் கலந்தே இருப்பது சிறப்பு.   இறைலயத்தையும் வாழ்க்கையம் பிரித்து பார்க்காமல் சேர்ந்தே இருக்கும் வன்னம் பார்த்துக்கொள்வது உண்மை அறிவு வளர்ச்சிக்கும், தெளிந்த ஆனந்தத்திற்கும் உதவும் . இறைலயம் என்பது வாழ்கை கச்சேரியில் எப்போதும்  இடைவிடாமல் ஒலிக்கவேண்டிய ஒரு ஸ்ருதி .     


                              
       

ஆரோக்யம்
 

            

 
குடும்ப நலன்
     
 பொருளாதார வளம் - தொழில் முன்னேற்றம்

 
அறிவு வளர்ச்சி

 
சமுதாய அக்கறை

மகிழ்ச்சி கொண்டாட்டம்

                                                                               .                                     

   
          றை                  ம்
________________________________________________________மேற்கண்ட அம்சங்களின் முக்கியத்துவம் உணர்ந்து வரிசைப்படுத்தி தேவைக்கேற்ப அளவை கூட்டியும் குறைத்தும்
,  ஒரு நிலையில் தேங்கி விடாமல் அனைத்திலும் அம்சங்களையும் எது முக்கியம் என்று பிரித்து பார்த்து பகிர்ந்து வாழ்வை வகுத்துக்கொள்வது நன்று .நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ சில எளிய வழிகள் ,
உறவுகளுடன் மகிழ்ச்சியோடு இருப்பது எப்படி
 ,

செல்வவளம் பெறுக கடை பிடிக்க வேண்டியவை
 ,

இப்படி மேற்கூறிய தலைப்புகளை சற்று விரிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன் !!!Saturday, September 16, 2017

Ben ka-ma a-ta?     Ben ka-ma a-ta? , என்றால் உங்கள் வயது என்ன என்று ஹீப்ரு மொழியில் கேட்பது.  சென்ற பதிவில் நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பார்த்தோம்அடுத்து இந்த பிரபஞ்சத்தின் வயது அல்லது எப்போது தோன்றியது போன்ற தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

 பிரபஞ்சத்தின் வயதை கணக்கிடும் பொழுது  அதன் தோற்றத்தை பற்றி பார்ப்பது சரியாக இருக்கும்.

முதலில் அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம்

இன்று வரை பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பிரதானமாக ஏற்று கொள்ளப்பட்ட கோட்பாடு   பெரு வெடிப்பு கோட்பாடு (Big-Bang Theory)  ஆகும்.

       
பெரு வெடிப்புக் கோட்பாடு  (Big-Bang Theory)  என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்

1929 ஆம் ஆண்டு Edwin Hubble என்று ஒரு விஞ்ஞானி வானில் நட்சத்திரங்கள் இரு வேறு நிறங்களில் மாறுவதை பார்த்தார், அதாவது  நம்மை  (பூமியை)  நோக்கி வரும் நட்சத்திரம் நீல நிறத்திலும் பூமியை விட்டு விலகி செல்லும் நட்சத்திரத்தின் சிவப்பு நிறத்திலும் தோன்றியது.

அதற்க்கு முன்பே அறவியல் படி  Doppler effect என்று ஒன்று உள்ளது அதாவது நகர்ந்து கொண்டு இருக்கும் பொருள் நிறங்கள் மாறும் என்பதாகும் அப்படி பார்க்கும் போது நட்சத்திரங்கள் நிறம் மாறுவது நகர்ந்து கொண்டிருப்பதை காட்டுகிறதுஅது மட்டும் அல்லாமல் இந்த நிறம் மாற்றம் பிரபஞ்சம் விரிவடைவதை உணர்த்திகிறது என்றும் சொல்ல்கிறார்.

அதே போல் நட்சத்திரங்கள் விலகி செல்வது பிரபஞ்சம் விரிவடைவதை காட்டுகிறது.
இப்படி இந்த பிரபஞ்சம் தினம் தினம் பெரிதாகிக் கொணடே இருக்கிறதுஇது எந்த வேகத்தில் பெரிதாகிறது என்றும் கூறுகிறார் அதை Hubble constant  என்று முறையில் கூறுகிறார்.
இந்த Hubble constant  மூலம் கணக்கிட்டால் இன்றைவிட இந்த பிரபஞ்சம் நேற்று சிறியதாக இருந்த்தது அதற்க்கு முன் இன்னும் சிறியதாக இருந்த்தது சென்ற வருடம் அதை விட சிறியதாக இருந்த்தது என்று இது காட்டுகிறது . இப்படி முன்ன நோக்கி சென்று கொண்டே இருந்த்த்தால் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு புள்ளியில் சென்று முடிகிறது .

எனவே பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory)  படி 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது என்று சொல்லாம்  

சரி இந்த  13.7 பில்லியன் ஆண்டு என்பது  ,
13,700,000,000 -  ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்ச தோன்றியது என்று இதுவரை அறிவியல் கூறுகிறது.
நம் மனித பிறப்பில் நமது வாழ் நாள் என்பது இப்போதுள்ள வயது சாரா சரியாக 70 வயது முதல் 100 வயது  முடிய என்று கூறலாம். இந்த வருடத்தை நம் முன் சொன்ன 13.7 பில்லியன் வருத்தத்தோடு ஒப்பிட்டால் நமக்கு தெரியும் நமது வாழ்நாள் எவ்வளவு சிறியது என்று .

சரி இது இந்த பிரபஞ்சம் ஒரு புள்ளில் சென்று முடியும் வரை தானே அறிவியல் கூறுகிறதுஅதற்க்கு முன் என்று கேட்கலாம். நமது அறிவியல் அறிவின் படி அது வரை மட்டுமே செல்ல முடியும் ஏன் என்றால் புள்ளிக்கு முன் இல்லாத ஒரு பொருள் எப்படி இருந்தது என்று அறிவியலால் கூறமுடியாது.


இதை பற்றி நம் வேதங்கள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

வேதங்கள் சொல்லும் கணக்கு படி நாம் நினைத்து கொண்டு இருக்கும் இந்த பிரமாண்ட 13,700,000,000 -  ஆண்டு எல்லாம் வெறும் நொடி பொழுது போல்.

ஆம் இந்த பிரபஞ்சம் ஒரு முறை தோன்றுவது அல்ல பல முறை தோன்றி தோன்றி மறைவதாகும் அறிவியல் ஒரு தோற்றத்தை பற்றி மட்டுமே சொல்கிறது அனால் நம் பிரபஞ்சம் ஏற்கனவே தோன்றி பிரளயம் ஆகி சுருங்கி மறுபடியும் விரிந்து கொண்டிருக்கிறது.
இதுவேய அறிவியலில் Big bang - Big crunch  நிரூபிக்கமுடியாமால் இருந்தாலும் யூகிக்கிறார்கள் . அதாவது பிரபஞ்சம் விரிந்து பிறகு சுருங்கி அழிகிறது மறுபாடியம் தோன்றி விரிகிறது என்று.

இதையே வேதங்கள் ஷிரிஷ்ட்டி  -  சிஷ்திதி – சம்ஹாரம் என்று கூறுகிறோம் . வேதத்தின் படி பல கோடி முறை இந்த சிஷ்திதி – சம்ஹாரம் நடந்திருக்கிறது நடந்து கொண்டிருக்கிறது.

அதை ஆண்டு கணக்கில் எப்படி கூறப்படுகிறது என்று பார்த்தால் ,

நாம் இப்போது வாழ்வது கலியுகம் ஆகும்.
இப்போது கலியுகத்தின் ஆண்டு   5119 (year 2017 ) - இந்த கலியுகத்தி ன் மொத்த ஆண்டு 4,32,000 ஆண்டுகள் .
 (ஆகா கலியுகத்திலே இன்னும் நம் பிரபஞ்சம் 4, 26,000 ஆண்டுக்கு மேல்  போகவேண்டி உள்ளது.)

அடுத்து துவாபரயுகம்இது கலியுகத்தை விட இரண்டு மடங்கு பெரியது மொத்தம் 8,64,000 ஆண்டுகள்.
அடுத்து  திரேதாயுகம்இது கலியுகத்தை விட மூன்று மடங்கு பெரியது மொத்தம் 12,96,000 ஆண்டுகள்.

அடுத்து  கிருதயுகம் (சத்ய யுகம் ) இது கலியுகத்தை விட நான்கு மடங்கு பெரியது மொத்தம் 17,28,000 ஆண்டுகள்.
ஆகா இந்த நான்கு யுகங்களும் சேர்த்து 43,20,000 ஆண்டுகள்இதை ஒரு  சதுர்யுகம்.
இதை கொஞ்சம் கணக்கு வடிவில் பார்க்கலாம் 

இப்போது -   கலியுகம்
5119


 கலியுகம்
4,32,000  ஆண்டுகள்


 துவாபரயுகம்
8,64,000 ஆண்டுகள்


 திரேதாயுகம்
12,96,000 ஆண்டுகள்


 கிருதயுகம் (சத்ய யுகம் ) 
17,28,000 ஆண்டுகள்


 ஒரு  சதுர்யுகம்
43,20,000 ஆண்டுகள்ஆகா 43,20,000 ஆண்டுகள் கொண்டது  ஒரு  சதுர்யுகம் .

இப்படி 1,000 சதிர்யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு பகல் , இன்னொரு 1,000 சதிர்யுகங்கள் அவர் உறங்கும் போதும் யுகங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆகா ப்ரம்மாவின் ஒரு நாள் என்பது  ( 2,000 ) இரண்டாயிரம் சதிர்யுகங்கள்.
ஆண்டு கணக்கில் பார்த்தால்

2,000 * 43,20,000
 8,64,00,00,000

இது ப்ரம்மாவின் ஒரு நாள் .


இப்படி அவரது வாழ்வில்  ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் .
8,64,00,00,000 * 365.

இந்த ப்ரம்மா இப்படி நூறு  (100) ஆண்டுகள் வாழ்வார்.
8,64,00,00,000 * 365 *100

அப்படி 51 பிரம்மாக்கள் வாழ்ந்து முடிந்தாயிற்று.


இதை தான் நாம் காளியின் கழுத்தில் 51 மண்டை ஓட்டுக்களை மாலையாக காணலாம்.

இப்போது  நாம் வாழும் ப்ரம்மாவின் வயது 36 ஆகும் .

காலம் அவ்வளவு பெரியது அதை கடந்தவள் காளி என்பதை நமக்கு குறியிடாக சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


இப்படி காலத்தின் அளவையும் நாம் வாழும் பிரபஞ்சத்தின் அளவையும் வைத்து பார்க்கும் பொழுது நாம் வாழும் இந்த வாழ்க்கை மிக மிக அற்பமானது.

இந்த வாழ்வை எதை நோக்கி நாம் நகர்வது இதில் எதையெல்லாம் பிரதானமாக அல்லது எந்தவரிசையில் ( priority ) எதற்கு முக்கியத்தும் தருவது என்பதை பற்றி நான் படித்து எனக்கு மனதில் பதிந்ததை உங்களுக்காக வரும் பதிவுகளில் பதிகிறேன் .

வாழ்க வளமுடன் !!!