Saturday, September 16, 2017

Ben ka-ma a-ta?



     Ben ka-ma a-ta? , என்றால் உங்கள் வயது என்ன என்று ஹீப்ரு மொழியில் கேட்பது.  சென்ற பதிவில் நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பார்த்தோம்அடுத்து இந்த பிரபஞ்சத்தின் வயது அல்லது எப்போது தோன்றியது போன்ற தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

 பிரபஞ்சத்தின் வயதை கணக்கிடும் பொழுது  அதன் தோற்றத்தை பற்றி பார்ப்பது சரியாக இருக்கும்.

முதலில் அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம்

இன்று வரை பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பிரதானமாக ஏற்று கொள்ளப்பட்ட கோட்பாடு   பெரு வெடிப்பு கோட்பாடு (Big-Bang Theory)  ஆகும்.

       
பெரு வெடிப்புக் கோட்பாடு  (Big-Bang Theory)  என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்

1929 ஆம் ஆண்டு Edwin Hubble என்று ஒரு விஞ்ஞானி வானில் நட்சத்திரங்கள் இரு வேறு நிறங்களில் மாறுவதை பார்த்தார், அதாவது  நம்மை  (பூமியை)  நோக்கி வரும் நட்சத்திரம் நீல நிறத்திலும் பூமியை விட்டு விலகி செல்லும் நட்சத்திரத்தின் சிவப்பு நிறத்திலும் தோன்றியது.

அதற்க்கு முன்பே அறவியல் படி  Doppler effect என்று ஒன்று உள்ளது அதாவது நகர்ந்து கொண்டு இருக்கும் பொருள் நிறங்கள் மாறும் என்பதாகும் அப்படி பார்க்கும் போது நட்சத்திரங்கள் நிறம் மாறுவது நகர்ந்து கொண்டிருப்பதை காட்டுகிறதுஅது மட்டும் அல்லாமல் இந்த நிறம் மாற்றம் பிரபஞ்சம் விரிவடைவதை உணர்த்திகிறது என்றும் சொல்ல்கிறார்.

அதே போல் நட்சத்திரங்கள் விலகி செல்வது பிரபஞ்சம் விரிவடைவதை காட்டுகிறது.
இப்படி இந்த பிரபஞ்சம் தினம் தினம் பெரிதாகிக் கொணடே இருக்கிறதுஇது எந்த வேகத்தில் பெரிதாகிறது என்றும் கூறுகிறார் அதை Hubble constant  என்று முறையில் கூறுகிறார்.
இந்த Hubble constant  மூலம் கணக்கிட்டால் இன்றைவிட இந்த பிரபஞ்சம் நேற்று சிறியதாக இருந்த்தது அதற்க்கு முன் இன்னும் சிறியதாக இருந்த்தது சென்ற வருடம் அதை விட சிறியதாக இருந்த்தது என்று இது காட்டுகிறது . இப்படி முன்ன நோக்கி சென்று கொண்டே இருந்த்த்தால் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு புள்ளியில் சென்று முடிகிறது .

எனவே பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory)  படி 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது என்று சொல்லாம்  

சரி இந்த  13.7 பில்லியன் ஆண்டு என்பது  ,
13,700,000,000 -  ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்ச தோன்றியது என்று இதுவரை அறிவியல் கூறுகிறது.
நம் மனித பிறப்பில் நமது வாழ் நாள் என்பது இப்போதுள்ள வயது சாரா சரியாக 70 வயது முதல் 100 வயது  முடிய என்று கூறலாம். இந்த வருடத்தை நம் முன் சொன்ன 13.7 பில்லியன் வருத்தத்தோடு ஒப்பிட்டால் நமக்கு தெரியும் நமது வாழ்நாள் எவ்வளவு சிறியது என்று .

சரி இது இந்த பிரபஞ்சம் ஒரு புள்ளில் சென்று முடியும் வரை தானே அறிவியல் கூறுகிறதுஅதற்க்கு முன் என்று கேட்கலாம். நமது அறிவியல் அறிவின் படி அது வரை மட்டுமே செல்ல முடியும் ஏன் என்றால் புள்ளிக்கு முன் இல்லாத ஒரு பொருள் எப்படி இருந்தது என்று அறிவியலால் கூறமுடியாது.


இதை பற்றி நம் வேதங்கள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

வேதங்கள் சொல்லும் கணக்கு படி நாம் நினைத்து கொண்டு இருக்கும் இந்த பிரமாண்ட 13,700,000,000 -  ஆண்டு எல்லாம் வெறும் நொடி பொழுது போல்.

ஆம் இந்த பிரபஞ்சம் ஒரு முறை தோன்றுவது அல்ல பல முறை தோன்றி தோன்றி மறைவதாகும் அறிவியல் ஒரு தோற்றத்தை பற்றி மட்டுமே சொல்கிறது அனால் நம் பிரபஞ்சம் ஏற்கனவே தோன்றி பிரளயம் ஆகி சுருங்கி மறுபடியும் விரிந்து கொண்டிருக்கிறது.
இதுவேய அறிவியலில் Big bang - Big crunch  நிரூபிக்கமுடியாமால் இருந்தாலும் யூகிக்கிறார்கள் . அதாவது பிரபஞ்சம் விரிந்து பிறகு சுருங்கி அழிகிறது மறுபாடியம் தோன்றி விரிகிறது என்று.

இதையே வேதங்கள் ஷிரிஷ்ட்டி  -  சிஷ்திதி – சம்ஹாரம் என்று கூறுகிறோம் . வேதத்தின் படி பல கோடி முறை இந்த சிஷ்திதி – சம்ஹாரம் நடந்திருக்கிறது நடந்து கொண்டிருக்கிறது.

அதை ஆண்டு கணக்கில் எப்படி கூறப்படுகிறது என்று பார்த்தால் ,

நாம் இப்போது வாழ்வது கலியுகம் ஆகும்.
இப்போது கலியுகத்தின் ஆண்டு   5119 (year 2017 ) - இந்த கலியுகத்தி ன் மொத்த ஆண்டு 4,32,000 ஆண்டுகள் .
 (ஆகா கலியுகத்திலே இன்னும் நம் பிரபஞ்சம் 4, 26,000 ஆண்டுக்கு மேல்  போகவேண்டி உள்ளது.)

அடுத்து துவாபரயுகம்இது கலியுகத்தை விட இரண்டு மடங்கு பெரியது மொத்தம் 8,64,000 ஆண்டுகள்.
அடுத்து  திரேதாயுகம்இது கலியுகத்தை விட மூன்று மடங்கு பெரியது மொத்தம் 12,96,000 ஆண்டுகள்.

அடுத்து  கிருதயுகம் (சத்ய யுகம் ) இது கலியுகத்தை விட நான்கு மடங்கு பெரியது மொத்தம் 17,28,000 ஆண்டுகள்.
ஆகா இந்த நான்கு யுகங்களும் சேர்த்து 43,20,000 ஆண்டுகள்இதை ஒரு  சதுர்யுகம்.
இதை கொஞ்சம் கணக்கு வடிவில் பார்க்கலாம் 

இப்போது -   கலியுகம்
5119


 கலியுகம்
4,32,000  ஆண்டுகள்


 துவாபரயுகம்
8,64,000 ஆண்டுகள்


 திரேதாயுகம்
12,96,000 ஆண்டுகள்


 கிருதயுகம் (சத்ய யுகம் ) 
17,28,000 ஆண்டுகள்


 ஒரு  சதுர்யுகம்
43,20,000 ஆண்டுகள்



ஆகா 43,20,000 ஆண்டுகள் கொண்டது  ஒரு  சதுர்யுகம் .

இப்படி 1,000 சதிர்யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு பகல் , இன்னொரு 1,000 சதிர்யுகங்கள் அவர் உறங்கும் போதும் யுகங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆகா ப்ரம்மாவின் ஒரு நாள் என்பது  ( 2,000 ) இரண்டாயிரம் சதிர்யுகங்கள்.
ஆண்டு கணக்கில் பார்த்தால்

2,000 * 43,20,000
 8,64,00,00,000

இது ப்ரம்மாவின் ஒரு நாள் .


இப்படி அவரது வாழ்வில்  ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் .
8,64,00,00,000 * 365.

இந்த ப்ரம்மா இப்படி நூறு  (100) ஆண்டுகள் வாழ்வார்.
8,64,00,00,000 * 365 *100

அப்படி 51 பிரம்மாக்கள் வாழ்ந்து முடிந்தாயிற்று.


இதை தான் நாம் காளியின் கழுத்தில் 51 மண்டை ஓட்டுக்களை மாலையாக காணலாம்.

இப்போது  நாம் வாழும் ப்ரம்மாவின் வயது 36 ஆகும் .

காலம் அவ்வளவு பெரியது அதை கடந்தவள் காளி என்பதை நமக்கு குறியிடாக சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


இப்படி காலத்தின் அளவையும் நாம் வாழும் பிரபஞ்சத்தின் அளவையும் வைத்து பார்க்கும் பொழுது நாம் வாழும் இந்த வாழ்க்கை மிக மிக அற்பமானது.

இந்த வாழ்வை எதை நோக்கி நாம் நகர்வது இதில் எதையெல்லாம் பிரதானமாக அல்லது எந்தவரிசையில் ( priority ) எதற்கு முக்கியத்தும் தருவது என்பதை பற்றி நான் படித்து எனக்கு மனதில் பதிந்ததை உங்களுக்காக வரும் பதிவுகளில் பதிகிறேன் .

வாழ்க வளமுடன் !!!

No comments:

Post a Comment