Thursday, January 20, 2011

எம்.ஜி.ஆர் ? - நம்பியார் ?- 1



வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று மனிதர்களை எதிர்கொள்வது , அதாவது " Handling the People , " என்று சொன்னால் அது சரியாக இருக்கும் .



அடிப்படையில் நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள அல்லது நாம் அன்றாடம் சந்திக்கின்றவர்கள் இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் சரி , நாம் அந்த நபரை பற்றிய நம் அபிப்ராயம் ஒன்றை நம் மனதில் ஏற்படுத்து கொள்கிறோம் . அது கணிசமான நேரங்களில் இரண்டு விதமாகத்தான் இருக்கும் ஒன்று அவர் நல்லவர் அல்லது மோசமான நபர் , இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் அவர் M.G.R ,. அல்லது நம்பியார் இப்படி திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல வைத்து கொள்கின்றோம் .


ஆனால் உன்மையில் கணிசமானவர்கள் அப்படி இல்லை . இரண்டும் கலந்தவர்கலாகதான் இருகின்றார்கள் , இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த " ஈரம் " என்ற ஒரு திரைபடத்தில் வரும் சில வார்த்தைகளை இங்கே சேர்ப்பது இந்த பதிவிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன் ,அந்த திரைப்படத்தின் climax இல் , சில வசனங்கள் ,


" ஆண்டவன் உலகை படைத்தான் , முதல் யுகத்தில் அனைவரையும் நல்லவர்களாக படைத்தான் , அங்கு நடந்த வினை பதிவின் காரணமாக , அடுத்த யுகத்தில் தீயவர்களையும் நல்லவர்கலயும் படைத்தான் ,ஆனால் தனி தனி இடத்தில் படைத்தான். அங்கு செய்த நல்வினை தீவினை காரணமாக அடுத்த யுகத்தில் நல்லவர்கலயும் தீயவர்கலயும் ஒரே இடத்தில சேர்ந்து வாழ படைத்தான் ஆண்டவன் .அடுத்து இந்த கடைசி யுகத்தில் நல்லவர்களும் தீயவர்களும் ஒரே மனிதனுக்குள் வைத்தான் இறைவன் ,"என்பது போல் இருக்கும்


அதுபோல , நாம் யாரயும் நல்லவர்கள் அல்ல தீயவர்கள் என்ற அடிப்படை என்னத்தை நீக்கி , எல்லோரையும் எதிர் கொள்ள வேண்டும் .இங்கு யாரும் முழு M.G.R ம் இல்லை நம்பியாரும் இல்லை .

சரி எப்படி இருக்கின்றார்கள் என்பதை பார்த்தோம் , நாம் எப்படி நடந்துகொள்வது நல்லது , அது நமக்கும் மற்றும் எல்லோருக்கும் எப்படி நன்மை பயக்கும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.. .


வாழ்க வளமுடன் !!!












Thursday, January 6, 2011

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.



எனக்கு உயிர் கொடுத்து என்னை காத்துகொண்டிருக்கும் என் பெற்றோரை வணங்கி .
அனைத்தையும் படைத்து காத்து கடைதேற்றும் இறைவனை வணங்கி என்பதிவுகளை துவங்குகின்றேன் .


இன்றைய பதிவில் ,

விநாயக பெருமான் தனது உருவத்தால் வாழ்க்கைக்கு நமக்கு கூறும் சில பயனுள்ள செய்திகளை பார்ப்போம் ,

அவரது சிறிய வாய் , கூர்மையான கண்கள், பெரிய காது , மற்றும் நீண்ட மூக்கு ( தும்பிக்கை ) இருப்பது ,

நாம் குறைவாய் பேசி அதாவது வள்ளுவர் கூறுவது போல்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

நாம் எப்போதும் அன்பு , அழகு நிறைந்ததோடு சேர்த்து அளவோடு பேச வேண்டும் என்பது போலும் ,

கூர்மையான பார்வை எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்து பார்க்கவேண்டும் , மற்றும் நம் பார்வை கூர்மையான வேல் போல நேர்மையாகவும் தீயவைகளை அளிக்கும் வண்ணமும் இருக்கவேண்டும் என்பது போலும் ,

பெரிய காது இதனால் நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனத்தோடும் , பரந்த உள்ளம் கொண்டது போல் பெரிய காது கொண்டு கேட்க வேண்டும் ,

மற்றும் தும்பிக்கை கூறுவது ,வாழ்க்கை போராட்டத்தில் எல்லோருக்கும் இருக்கும் இரு கைகளோடு சேர்த்து நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் ,

இப்படி நமக்கு பல பயனுள்ள செய்திகளை கூறுவதாக இருக்கிறது .


மேலும் ,

விநாயகர் தனது பெற்றோரையே உலகம் என்று சுற்றி வந்து பழம் பெற்ற கதை எல்லோருக்கும் தெரியும் ,
அந்த கதை கூறுவது ,
கடவுள் யார் என்று கேட்டால் நாம் சொல்லும் முதல் பதில் நம்மை படைத்தவன் என்று ,
படைத்தல் என்றால் உடலையும் உயிரையும் கொடுப்பது அதை செய்தவர்கள் நம் பெற்றோர்கள் தான் , நாம் நம் பெற்றோருக்கு உண்மையாக இருந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துகொண்டலே நாம் எல்லாவற்றிலும் வெல்லலாம் என்பதை கூறுகின்றது .

இன்றைய பதிவின் மூலம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று உணர்வோம் , மற்றும் விநாயக பெருமானின் உருவமே வாழ்க்கை தத்துவங்களை உள்ளடக்கியதாக பார்க்கிறோம் .

மீண்டும் ஒரு நல்ல பதிவோடு சந்திப்போம் .

வாழ்க வளமுடன்