Thursday, January 6, 2011

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.



எனக்கு உயிர் கொடுத்து என்னை காத்துகொண்டிருக்கும் என் பெற்றோரை வணங்கி .
அனைத்தையும் படைத்து காத்து கடைதேற்றும் இறைவனை வணங்கி என்பதிவுகளை துவங்குகின்றேன் .


இன்றைய பதிவில் ,

விநாயக பெருமான் தனது உருவத்தால் வாழ்க்கைக்கு நமக்கு கூறும் சில பயனுள்ள செய்திகளை பார்ப்போம் ,

அவரது சிறிய வாய் , கூர்மையான கண்கள், பெரிய காது , மற்றும் நீண்ட மூக்கு ( தும்பிக்கை ) இருப்பது ,

நாம் குறைவாய் பேசி அதாவது வள்ளுவர் கூறுவது போல்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

நாம் எப்போதும் அன்பு , அழகு நிறைந்ததோடு சேர்த்து அளவோடு பேச வேண்டும் என்பது போலும் ,

கூர்மையான பார்வை எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்து பார்க்கவேண்டும் , மற்றும் நம் பார்வை கூர்மையான வேல் போல நேர்மையாகவும் தீயவைகளை அளிக்கும் வண்ணமும் இருக்கவேண்டும் என்பது போலும் ,

பெரிய காது இதனால் நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனத்தோடும் , பரந்த உள்ளம் கொண்டது போல் பெரிய காது கொண்டு கேட்க வேண்டும் ,

மற்றும் தும்பிக்கை கூறுவது ,வாழ்க்கை போராட்டத்தில் எல்லோருக்கும் இருக்கும் இரு கைகளோடு சேர்த்து நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் ,

இப்படி நமக்கு பல பயனுள்ள செய்திகளை கூறுவதாக இருக்கிறது .


மேலும் ,

விநாயகர் தனது பெற்றோரையே உலகம் என்று சுற்றி வந்து பழம் பெற்ற கதை எல்லோருக்கும் தெரியும் ,
அந்த கதை கூறுவது ,
கடவுள் யார் என்று கேட்டால் நாம் சொல்லும் முதல் பதில் நம்மை படைத்தவன் என்று ,
படைத்தல் என்றால் உடலையும் உயிரையும் கொடுப்பது அதை செய்தவர்கள் நம் பெற்றோர்கள் தான் , நாம் நம் பெற்றோருக்கு உண்மையாக இருந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துகொண்டலே நாம் எல்லாவற்றிலும் வெல்லலாம் என்பதை கூறுகின்றது .

இன்றைய பதிவின் மூலம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று உணர்வோம் , மற்றும் விநாயக பெருமானின் உருவமே வாழ்க்கை தத்துவங்களை உள்ளடக்கியதாக பார்க்கிறோம் .

மீண்டும் ஒரு நல்ல பதிவோடு சந்திப்போம் .

வாழ்க வளமுடன்



3 comments:

  1. வாழ்த்துக்கள்.. சவுந்தர்.. அடுத்த பதிவில்.. சந்திக்கலாம்..:)

    ReplyDelete
  2. நண்பா ,

    காயமே இது பொ(மெ)ய்யடா வெறும் காற்றடித்த பையடா....

    இந்த தத்துவத்தை தாங்கள் உணர்ந்தால் தாங்களும் சித்தர் தான் .

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete