Sunday, August 27, 2017

“ நான் எங்க இருக்கேன் “ ! ! ! ! , . . . . .





நான் எங்க இருக்கேன் ?????“ !!!!,....

பழைய  படங்களில் பைத்தியம் அல்லது  மயக்கம் தெளிஞ்சு எழுந்திருப்பவர்கள் கேட்க்கும் முதல் கேள்வி.
இந்த கேள்விக்கும் பதிவின் இந்த தலைப்புக்கும் நேரடி தொடர்பில்லை , நகைச்சுவைக்கே .

சரி விஷயத்துக்கு வருவோம் உங்களிடம் எங்கே இருக்குறீர்கள் என்று கேட்டால்  என்ன சொல்வீர்கள். கேட்கிற ஆளை பொறுத்த்து  வீடு அலுவலகம் என்று எதுவோ அதை சொல்வீர்கள்
.

ஒரு கற்பனைக்கு , புதிதாய் ஒருவர் நீங்க எங்க இருக்கீங்கன்னு 
கேட்டால்  என்ன சொல்லலாம் , உங்களது ஊரின் பெயரா ? நாட்டின் பெயரா ? இல்லை பூமியில் தான் என்று சொல்லலாமா ?, 


சரி நாம் அதையும் தாண்டி யோசித்து சொல்வோமா ? தெரியவில்லை ?!
இந்த பதிவில் அதையும்  தாண்டி  கொஞ்சம் யோசிப்போமா,....

இவ்ளோ பெரிய இடத்திலா
இருக்கிறோம்  ???! !

என்று நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும்
.





நமது பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ  மற்றும் பூமியின் பூமத்திய ரேகையில் குறுக்காக 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர் நீளம் உள்ளது .
புரிதலுக்காக... நமது  பூமி நாம் வாழும் பாரத நாட்டின் அளவில் 150 மடங்கு பெரியது, அதாவது இந்தியா அளவில் பூமியில் 0.06 % சதவிகிதம், ஆம் பூமி பரப்பளவு    ( 196,900,000 square miles , நம் நாட்டின் பரப்பளவு 1,269,219 sq mi ) 

எவ்வளவு  பெரிய பூமி இல்லையா ! ! ! ! ! !
---------------------------------------------
--

இதற்கே ஆச்சர்யமா ,

அடுத்து


நமது பூமி சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களில் ஒரு கோள்


நமது பூமி நான்காவது பெரிய கோள் அதுமட்டும் அல்ல  பூமியை விட
வியாழன் 11 மடங்கு பெரியது ,
கோள்களின் விவரம் உங்களுக்காக கீழ்



Jupiter
1,120% the size of Earth
Saturn
945% the size of Earth
Uranus
400% the size of Earth
Neptune
388% the size of Earth
Earth

Venus
95% the size of Earth
Mars
53% the size of Earth
Mercury
38% the size of Earth


இதை பார்க்கும் போது  பூமி சூர்ய குடும்பத்தில் எவ்வளவு பெரியது என்பது புரிந்திருக்கும்
.






சரி நம் சூரியனை பற்றி பாப்போம்,

சூரியன் நாம் வசிக்கும் பூமியின் குறுக்கு அளவில் 109 மடங்கு பெரியது
ஆகா நமது பூமி சூரியனை சுற்றி வரும் அளவில் ஒரு சின்ன கொசு,  சூரியன் எவ்வளவு பெரிசு இல்ல.
! ! ! ! ! ! !



             
                                                                                                                           சரி
இவ்ளோ பெரிய சூரியன் தனியாகவா  இருக்கு ? . . . . . .  இல்லை, நம் சூரியன் பேர் அண்டத்தில் ஒரு நட்சத்திரம் , ஒரு நட்சத்திரம் மட்டும் அல்ல கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம்ஆம் நம் சூரியனை போலவே பல கோடி நட்சத்திரங்களும் , நட்சத்திர குடும்பங்களும் உள்ளது.



அந்த பேர் அண்டம் எவ்வளவு பெரியது
அதன் அளவுகளை பார்ப்பதற்கு முன்

ஒளி ஆண்டை பற்றி பார்ப்போம்
,

அதென்ன ஒளி ஆண்டு
?

நாம் இதுவரை -- தூர  அளவை- - மீட்டர் , கிலோ மீட்டர் , மைல் என்ற அளவுகளில் பார்த்தோம்
இனி அப்படி தூரத்தை கணக்கிட்டால் கோடி கோடி மைல் என்று போய் கொண்டே இருக்கும்.

அதனால்

ஓளி ஒரு
 நொடியில் எவ்வளவு தூரம் பயமன் செய்யுமோ அந்த அளவை  வைத்து தூரத்தை கணக்கிடுவது எளிதாகும்.
ஒரு நொடியில் ஒளி முன்னூறு ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும்.
அதை வைத்து பார்க்கும் போது

300,000 கி. மீ. 
X 60
நிமிடத்துக்கு

X 60   X 60
ஒரு மணி நேரத்துக்கு

X 60 X 60 X 60 X 24
ஒரு நாளைக்கு

X 60 X 60 X 60 X 24  X 365
ஒரு வருடத்துக்கு - பயணம் செய்யும்




ஒரு ஒளி ஆண்டின் அளவு கிட்டத்தட்ட 9.5 ( 9,460,800,000,000 ) லட்சம் கோடி கி. மீ. பயணம் செய்யும் தூரத்தை குறிக்கும்.



ஒரு ஒளியாண்டு என்பது ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் ஒரு  வருடத்திற்கு பயணம் செய்யும் தூரம் ஆகும்.


சரி இப்போது பார்ப்போம்
நமது பேர் அண்டத்தின் அளவை ,

பால் வெளியின் விட்டம்   (diameter)  980,000 ஒளியாண்டு அதாவது ஒளியின் வேகத்தில் பால் வெளி மண்டலத்தில் குறுக்காய் பயணம் செய்ய கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்.நாம் வாழும் பேர் அண்டத்தின் பெயர் பால் வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸி (Milky way galaxy ).சூரியன் போன்ற பல கோடி நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம்.

எவ்ளோ பெருசு நம்ம கேலக்ஸி , ஆமா  சூரியனே ஒரு சின்ன தூள் போல தான் இருக்கும் , அவ்ளோ பெருசு
.






அவ்ளோ பெரிய galaxy வேற எதாவது இருக்கானு telescope ல பார்த்தா galaxy  ஒன்னு தனியாக இருந்த தெரியாதாம். கூட்டம் கூட்டமா சேர்ந்து இருந்தால் தான் ஒரு புள்ளி மாதிரி தெரியுமாம்.

அப்போ இவ்வளவு பெரிய galaxy சேர்ந்து இருந்தால் தான் தெரியும் என்றால் , எவ்வளவு தூரம் அதற்கிடையில் இருக்கும் என்று நினைத்து பார்க்கவேய ஆச்சர்யமாக இருக்கிறது.






அப்படி பட்ட ஒரு galaxy சிலந்தி வலை போல இருக்கும் இடத்தில் , அதன் மேலே பல galaxy கூட்டம் சேர்ந்து இருக்கிறதாம். அதை cluster என்று சொல்வார்கள். அப்படி பட்ட cluster  நிறைய ஒன்று சேர்ந்து super clusters என்று பெயரிடப்பட்டுள்ளது.

மறுபடியும் முதலில் இருந்து யோசிப்போம்

நமது பூமி சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களில் ஒரு கோள்.

சூரியன் பேர் அண்டத்தில் ஒரு நட்சத்திரம்.

பால் வெளி மண்டலம் எனப்படும் கேலக்ஸி (Milky way galaxy ). சூரியன் போன்ற பல கோடி நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம்.

அப்படி பட்ட கேலக்ஸி எண்ணில் அடங்கா மற்றும் கணக்கிட முடியாத தூர இடைவெளியில் உள்ளது.


இப்போது சொல்லுங்கள் , நாம் வாழும் இந்த வாழ்க்கை இயற்கையின் அளவை பார்க்கும் 
போது மிக மிக அற்பம் அல்லவா

அதற்குள் நமக்கு எதற்கு கோபம்பொறாமை,கர்வம், ஆணவம் போன்ற தீய குணங்கள் .



சரி நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பார்த்தோம் , நாம் மற்றும் நமது பிரபஞ்சம் எவ்வளவு நாளாக உள்ளது அதாவது பிரபஞ்சத்தின் வயதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் .


வாழ்க வளமுடன் !!!




1 comment: